Thursday, 24 March 2016
நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன்.
இப்படிக்கு இவர்கள் - பகுதிக்கு
இன்னும் நிறையச் சாதிக்க - எழுதி எழுதிச் சாதிக்கத் திட்டமிட்டிருந்த - அடித்தட்டு மக்களின் பன்முக ஆளுமையின் குறியீடாய் விளங்கிவந்த - அவரைச் சந்தித்துச் சில மணித்துளிகள் உரையாடிய அனுபவமுள்ள எவராலும் வாழ்நாள் முழுவதும் மறக்கவியலாத அன்பின் வடிவமாய் நெஞ்சில் நின்று ஒளிர்பவர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன்.
அவருடைய எந்த ஒரு நூலுக்குள் நுழைந்தாலும் புதிய புதிய ஆய்வுமுடிவுகளையும் மனதில் பதியும் கலை இரசனையையும் நம் சிந்தனையில் ஏந்திக்கொள்ளலாம் . அந்த அளவுக்கு எந்தப் பணியையும் சீரிய முறையிலும் நேரிய நெறியிலும் ஆற்றியவர் கே.ஏ.ஜி. அத்தகைய கே.ஏ.ஜி.யின் கலை -இலக்கியப் பங்களிப்பைப் பண்பாட்டுப் பின்னணியோடு மகத்த துல்லியமாக மதிப்பிட்டு எழுதப்பட்டுள்ள பேராசிரியர் வீ. அரசு அவர்களின் கட்டுரையின்வழி தி இந்து தமிழ் நாளிதழ் நல்ல அறிவார்ந்த அஞ்சலியைச் செலுத்தியுள்ளது.
கே.ஏ.ஜி. ஒரு நாட்டுப்புறக் கலையியல் அறிஞர் ; கலைஞர். நாடகத் துறை விற்பன்னர்; ஆய்வாளர்enbana அவர் தொடங்கித் துலங்கிய அடையாளங்கள். அண்மைய ஐந்தாறு ஆண்டுகளில் அவர் ஒரு செவ்விலக்கிய உரையாசிரியராகத் தன்னைப் பரிணாமப் படுத்திக்கொண்டே கொண்டே வந்தார். இது அவரது பன்முகப் பரிமாணங்களுள் குறிப்பிடத்தக்கது . இதுவரை , பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய இரண்டு நூல்களுக்கும் வந்துள்ள உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சிந்தனை ஒளியைப் பாய்ச்சிப் புத்துரைகள் கண்டார். இந்தவகையில் அவர் 21 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் ஒருவர். பதிற்றுப்பத்து என்றாலே சேரர் வரலாற்றிலக்கியம் என்றிருந்த அறுதப் பழசான பார்வையிலிருந்து அந்நூல் ஒரு கலைஞர்களின் வாழ்வியல் பெட்டகம் என்ற புதிய நோக்கில் உரைகண்டார். அதைப்போலவே, ஜூலை 2015 இல் என்சிபிஹெச் ஆல் வெளியிடப்பட்டுள்ள அவரது " பட்டினப் பாலை - ஆராய்ச்சிப் புத்துரை " நூல் , அந்நூலின் சமணப் பின்னணியைத்thellithin நிறுவியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக பொத்த, சமண ஆய்வாளராக இயங்கிவரும் என்னைப் போன்றவர்களாலும்enakkum முன்னே இயங்கிவரும் சிலராலும் இதுவரயிலும் கண்டறியப்படாத சமணக் கூறுகளை , கடந்த ஐந்தாறு ஆண்டுகளுக்குள் இத்துறையில் காலடிஎடுத்துவைத்த கே.ஏ,ஜி. கண்டறிந்து உரை வரைந்துள்ளார். இந்த இரண்டு நூல்களுக்கும் உரை எழுதியதுபோலவே இன்னும் பல சங்க இலக்கியப் பனுவல்களுக்கு கே.ஏ.ஜி. எழுதத் திட்டமிட்டிருந்த செவ்விலக்கியப் புத்துரைகள் கிட்டாமல் போனது தமிழிலக்கிய உலகுக்கு மாபெரும் பேரிழப்பாகும்.
-- முனைவர் சு.மாதவன் , தமிழ் உதவிப் பேராசிரியர் - குடியரசுத் தலைவர் விருது பெற்றவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ( த ), புதுக்கோட்டை . பேச : 9751 330 855
No comments:
Post a Comment