Wednesday, 21 January 2015

21.01.2015 பிறந்த நாள் செய்தி


21.01.2015 பிறந்த நாள் செய்தி
செம்மொழி வானில்
செந்நிலா
செங்கதிர் செவ்வியாழ்
ஒலி
ஒளி
வழி மூன்றுமாய்…
இசையாய்…
இசைவாய்…
செம்மொழி வானம்
சிவந்தது அன்று (17.01.2015)
விமலமாதவம்
சிறந்தது நன்று
மாதவ ஞாலம்
பிறந்தது இன்று (21.01.2015)
மொழி நிலா கதிர் மூன்றும்
சிறக்கட்டும் வென்று!
மானுடம் போற்றும்
மார்க்(ஸ்)கத்தில் நின்று…
மா நுடம் போக்கும்
வாழ்க்கையே நன்று!
கல்வி பெற்ற எல்Nலூரும்
கசடராக இல்லாமல்
அள்ளிச் சாதி மலத்தை
அகத்தில் சுமந்து செல்லாமல்
பள்ளி கல்லூரி கலைக்கழகம்
பதராக ஆகிவிடாமல்
வெள்ளி ஞான மனிதம் பேண
வேட்கைகொள்வோம் விரைவில் வெல்வோம்.
--முனைவர் சு.மாதவன்

No comments:

Post a Comment