Wednesday, 6 May 2020

அப்பா நினைவுநாள் கவிதை - 06 மே 2020

அப்பா நீங்கள்
மண்ணுள் இல்லை...
என்னுள் வாழ்கிறீர்கள்...!

உங்கள் சேவையுள்ளம்
எனக்கும் உண்டு..

உங்கள் அளவுக்கு
என்சேவை இல்லை...

உங்கள் நேர்மை
எனக்கும் உண்டு...

உங்களைப் போலவே
என்னையும் யாரும் புரிவதில்லை...

உங்கள் கொள்கை
எனக்கும் உண்டு...

உங்கள் காலம் போல்
இக்காலம் இல்லை...

யாரெல்லாம் பயனடைந்தார்களோ
உங்களிடம்

அவர்களில் அதிகமானோர்
நன்றிகொன்றார்களில்லையா...

அதையேதான்
நானும் பெறுகிறேன்...

உங்கள் விடாமுயற்சி
எனக்கும் உண்டு...

உங்கள் அளவுக்கு
என்முயற்சி இல்லை...

உங்களின் காலந்தவறாமை மட்டும்
இன்னும் எனக்கு
வரவில்லையப்பா....?!

என்னுள் இருந்து
இயக்குங்களப்பா.....

அதுமட்டுமா....?!

ஒரு பைசா கூடக்
கடன் வைக்கவில்லை எனக்கு நீங்கள்....

அதேமாதிரி உங்கள்
பேரப்பிள்ளைகளுக்குக்
கடன் வைக்காமல்
வாழ்ந்து முடிக்கவேண்டுமப்பா...

இப்பவும் அப்பாவிடம்
எதிர்பார்க்கும் பிள்ளையாகவே
இருக்கிறேனப்பா...

உள்ளுக்குள் இருக்கும்
நீங்கள் இயக்குங்களப்பா....

No comments:

Post a Comment