Thursday, 19 November 2015
Saturday, 5 September 2015
Tuesday, 1 September 2015
தமிழ் வீதி: வழியெங்கும் புத்தகங்கள்
தமிழ் வீதி: வழியெங்கும் புத்தகங்கள்: நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பா...
Friday, 24 July 2015
Sunday, 19 July 2015
Solai Sundaraperumal: தாண்டவபுரம் புதினத்தில் திணைகளின் எழுச்சி - சி. அற...
Solai Sundaraperumal: தாண்டவபுரம் புதினத்தில் திணைகளின் எழுச்சி - சி. அற...: தா ண்டவபுரம் புதினத்தின் கதைத்தலைவன் திருஞானசம்பந்தன். திருஞானசம்பந்தனின் மதம் சைவம். இந்தச் சைவம் தமிழகத்தில் தமிழ்ச் சைவமாக...
Solai Sundaraperumal: சோலை சுந்தரபெருமாள் : ஆளுமைக் குறிப்பு - Solai Sun...
Solai Sundaraperumal: சோலை சுந்தரபெருமாள் : ஆளுமைக் குறிப்பு - Solai Sun...: சோலை சுந்தரபெருமாள் 2.194 / நடுத்தெரு காவனூர், அம்மையப்பன் – 613 701 திருவா...
Thursday, 9 July 2015
Thursday, 12 March 2015
Wednesday, 21 January 2015
21.01.2015 பிறந்த நாள் செய்தி
21.01.2015 பிறந்த நாள் செய்தி
செம்மொழி வானில்
செந்நிலா
செங்கதிர் செவ்வியாழ்
செந்நிலா
செங்கதிர் செவ்வியாழ்
ஒலி
ஒளி
வழி மூன்றுமாய்…
இசையாய்…
இசைவாய்…
ஒளி
வழி மூன்றுமாய்…
இசையாய்…
இசைவாய்…
செம்மொழி வானம்
சிவந்தது அன்று (17.01.2015)
விமலமாதவம்
சிறந்தது நன்று
சிவந்தது அன்று (17.01.2015)
விமலமாதவம்
சிறந்தது நன்று
மாதவ ஞாலம்
பிறந்தது இன்று (21.01.2015)
மொழி நிலா கதிர் மூன்றும்
சிறக்கட்டும் வென்று!
பிறந்தது இன்று (21.01.2015)
மொழி நிலா கதிர் மூன்றும்
சிறக்கட்டும் வென்று!
மானுடம் போற்றும்
மார்க்(ஸ்)கத்தில் நின்று…
மா நுடம் போக்கும்
வாழ்க்கையே நன்று!
மார்க்(ஸ்)கத்தில் நின்று…
மா நுடம் போக்கும்
வாழ்க்கையே நன்று!
கல்வி பெற்ற எல்Nலூரும்
கசடராக இல்லாமல்
அள்ளிச் சாதி மலத்தை
அகத்தில் சுமந்து செல்லாமல்
பள்ளி கல்லூரி கலைக்கழகம்
பதராக ஆகிவிடாமல்
வெள்ளி ஞான மனிதம் பேண
வேட்கைகொள்வோம் விரைவில் வெல்வோம்.
கசடராக இல்லாமல்
அள்ளிச் சாதி மலத்தை
அகத்தில் சுமந்து செல்லாமல்
பள்ளி கல்லூரி கலைக்கழகம்
பதராக ஆகிவிடாமல்
வெள்ளி ஞான மனிதம் பேண
வேட்கைகொள்வோம் விரைவில் வெல்வோம்.
--முனைவர் சு.மாதவன்
தன் ஆளுமைக் குறிப்பு

முனைவர் சு.மாதவன் மா.மன்னர் கல்லூரி (தன்னாட்சி)
உதவிப் பேராசிரியர் புதுக்கோட்டை – 622 001
தன் ஆளுமைக் குறிப்பு
1. தந்தை :
திரு மா.சுப்பிரமணியன்
2. தாய் :
திருமதி சு.பொட்டுஅம்மாள்
3. இல்லற இணை :
முனைவர் அ.விமலா
4. மக்கட் பேறு :
வி.மா.செம்மொழி, வி.மா.செந்நிலா
வி.மா.செங்கதிர் செவ்வியாழ்
5. என் பிறந்த நாளும் வயதும் :
21.01.1969 வயது (44)
6. பிறந்த ஊரும் முகவரியும் :
கள்ளக்காத்தான் - கிராமம், பெருமருதூர்- அஞ்சல் ஆவுடையார்கோவில் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அ.கு.எண் : 614618
7. பணியும் கல்லூரியும் :
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
மா.மன்னர் கல்லூரி (த)
புதுக்கோட்டை -1.
8. கல்வியும் காலமும் இடமும் :
1. ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு - 1973-1975 - ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பெருமருதூர்.
2. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை - 1975-1978 - ரோமன் கத்தோலிக்க நடுநிலைப்பள்ளி, அறந்தாங்கி
3. ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை - 1978-1983 - அரசினர் நடுநிலைப்பள்ளி, பெருமருதூர்.
4. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு - 1983-1985, அரசினர் உயர்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம்
5. மேனிலைக் கல்வி - 1987-88 - அரசினர் மேனிநிலைப்பள்ளி, பெருமகளுர்.
6. பி.லிட்., (தமிழ்) -1988-91 - தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி, தஞ்சாவூர்
7. எம்.ஏ., - 1991-1993 - அ.வீ.வா.நி. திரு.புட்பம் கல்லூரி, பூண்டி.
8. எம்ஃபில்., (தத்துவம்) - 1993-1995 - தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
9. பிஎச்.டி., (தத்துவம்)., -1995-2006 - தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
9. பல்லைக் கழக நல்கை ஆணையம் நடத்தும் விரிவுரையாளர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி – 1996.
10. ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத் தலைப்பு
தமிழ் அறஇலக்கியங்களும் பௌத்தமும்
11. முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு
தமிழ் அறஇலக்கியங்களும் பௌத்த, சமண அறங்களும்
12. ஆசிரியர் பணி : 1. 04.08.1998 முதல் 09.02.1999 வரை
தமிழ் விரிவுரையாளர்
மாணிக்கம் கலை அறிவியல் கல்லூரி
(மருதுபாண்டியர் கல்லூரி), தஞ்சாவூர்
2.
எம்ஃபில் வகுப்புகள் எடுத்தமை
ஆழகப்பா பல்கலைக்கழகம்
தொலைநிலைக்கல்வி – படிப்பு மையம்
தஞ்சாவூர், (3ஆண்டுகள்).
3.
17.06.2002 முதல் 24.12.2007 வரை
தமிழ் விரிவுரையாளர்
பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி
தஞ்சாவூர்
4.
26.12.2007 முதல் 06.10.2008 வரை
விரிவுரையாளர் ரூ தலைவர்
திரு.ஆ.கோவிந்தசாமி அரசினர் கலைக்கல்லூரி, திண்டிவனம் - 604 002.
5.
07.10.2008 முதல் நாளது வரை உதவிப்பேராசிரியர்
மா.மன்னர் கல்லூரி (த),
புதுக்கோட்டை – 622 001.
13. ஆய்வுப் பணி
பல்கலைக் கழக நல்கை ஆணையம் வழங்கும் ஆய்வுப் பெருந்திட்டத்தில் ஆய்வுத் தகைமையாளர் பணி – 3ஆண்டுகள்.
தலைப்பு : தமிழ் இலக்கியத்தில் ஆசீவகம்
திட்ட இயக்குநர் : முனைவர் க.நெடுஞ்செழியன்
14. ஈடுபாடுள்ள துறைகள் :
ஆய்வு, கவிதை, சேவை
15. ஆய்வு மாணவர் எண்ணிக்கை
நிறைவு
பணியில்
எம்.ஏ திட்டக்கட்டுரை 12 03
எம்ஃபில்., 10 01
பிஎச்.டி., 02 06
16. வெளியிட்டுள்ள நூல்கள்/ கட்டுரைகள்
எழுதி வெளிவந்துள்ள நூல்கள் -
09
பதிப்பித்தவை -
03
கட்டுரைகள்
தேசிய அளவில் - 13
பன்னாட்டு அளவில் - 30
17. பெற்றுள்ள பரிசுகள்
/ விருதுகள்
1. சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான முதல்பரிசு, பாரதிதாசனின் சமூகச் சிந்தனை, ஆய்வுக் கட்டுரைப் போட்டி, பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சிராப்பள்ளி, 1990,
ரூ.500ஃ- (எம்ஃபில்., பி.எச்.டி., ஆய்வாளர்கள் வரை கலந்துகொண்ட போட்டியில் பி.லிட்., மாணவனாக..).
2. இளநிலை ஆய்வு நல்கை, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ஐஊர்சு), புதுதில்லி, 1994-1995, மாதம் ரூ.1800ஃ-
3. சிறந்த ஆய்வுக் கட்டுரைக்கான முதல்பரிசு, வள்ளுவரின் உலகியற்றியான்., ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 1999, ரூ.1000ஃ-
4. சிறந்த கட்டுரைக்கான முதல்பரிசு, ஆசிரியர் தினக் கட்டுரைப் போட்டி, பயிலல் -
பயிற்றுவித்தலுக்கான ஆசிரிய அணுகுமுறைகள், பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி, தஞ்சாவூர், 2003, ரூ.5000ஃ-
5. சிறந்த எழுத்தாளரின் நூல் வெளியீட்டுக்கான பரிசு, தமிழ் அறஇலக்கியங்களும் பௌத்த, சமண அறங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு அரசு, 2007, ரூ.20,000ஃ-
6. சிறந்த படைப்புத் திறனுக்கான பரிசு, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியர்களுக்கான போட்டி, நூல்களுக்காக, கௌரா இலக்கிய மன்றம், திருச்சிராப்பள்ளி, 2010, ரூ.10,000ஃ-
7. இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருது – 2008-2009,
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை, குடியரசுத் தலைவர் மாளிகை, புதுதில்லி, ரூ.1 இலட்சம், 21.012.2012.
18. நூல்கள் வெளியீடு
1. கொஞ்சம் பாடல்களும் கொஞ்சம் கவிதைகளும், ஏழைதாசன், வெண்மணி பதிப்பகம், கள்ளக்காத்தான் கிராமம், புதுக்கோட்டை, 3 பிப்ரவரி.1994. 18 பக்கங்கள்.
2. இந்தியச்சமூகம் மார்க்சும் பெரியாரும், 2002 (மணவிழா வெளியீடு), மானுடம், தஞ்சாவூர், 30 பக்கங்கள்
3. இந்தியச் சமூகம் மார்க்சும் பெரியாரும், 2005 (கட்டுரைத் தொகுப்பு), அனன்யா, தஞ்சாவூர்,36 பக்கங்கள்.
4. இந்தியச் சமூக மரபில் புத்தர், 2006, அன்னம் -அகரம், தஞ்சாவூர், 110 பக்கங்கள்.
5. பன்முகத் தமிழியல் (12 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு) 2009 செம்மொழி, தஞ்சாவூர், 125 பக்கங்கள்.
6. தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், 2008, செம்மொழி, தஞ்சாவூர், 396 பக்கங்கள் (முனைவர்ப்பட்ட ஆய்வேடு, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சிறந்த எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பெற்று வெளியிடப்பெற்றது).
7. சமூக மெய்யியல் நோக்கில் திருக்குறள், 2009, செம்மொழி, தஞ்சாவூர். 120
பக்கங்கள்.
8. புத்தரும் அவர்தம் அறவியலும், 2009, செம்மொழி, தஞ்சாவூர், 112 பக்கங்கள்.
9. தமிழில் பெயர்இல்லாத மக்கள் எப்படித் தமிழ்மக்கள் ஆகமுடியும்? தொகுப்பு : முனைவர் சு.மாதவன், கி.கோவிந்தன், கு.ஜெகன், காதணிவிழா அன்பளிப்பு வெளியீடு (வி.மா.செம்மொழி, வீ.மா.செந்நிலா, வி.மா.செங்கதிர் செவ்வியாழ்), செம்மொழி, தஞ்சாவூர், 17 மார்ச் 2013, 36 பக்கங்கள்.
19.நூல்களில் அச்சில்
1. தமிழில் பௌத்தச் சிந்தனைகள், கற்பகம் புத்தகாலயம், சென்னை, 120 பக்கங்கள்.
2. புத்த மதத்தை வளர்த்த சுத்த மனத்தர், கற்பகம் புத்தகாலயம், சென்னை, பக்கங்கள்.
3. தம்ம பதம் - மும்மணி, அப்பாத்துரையார், கற்பகம் புத்தகாலயம், சென்னை,
பக்கங்கள்.
4. நாட்டு அகவியல் (நம்பிக்கை, வழிபாடு, மரபு) செம்மொழி, தஞ்சாவூர்,
பக்கங்கள்
20.நூல்கள் தயாரிப்பில்
1. இந்தியச் சமூக மரபில் புத்தரும் நாளந்தாவும்
2.
ஆதிவேளாண்குடி ‘ஆற்றுக்காலாட்டியர்’
3.
ஒரே குறளில் வள்ளுவத்தின் முழுமை
4.
இந்தியச் சமூகம் : சிந்தனைப் பன்முகம்
21.பதிப்பித்தவை
1. பதிப்புக்குழு உறுப்பினர், ஆய்வுச் சிந்தனைகள் தொகுதி.1,2, ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம்,
மதுரை, மார்ச்.2001
2. பதிப்புக்குழு உறுப்பினர், பாரத் முத்துக்கள் - ஆண்டுமலர், பாரத் கல்லூரி, 2002-2003,
2003-2004
3. பதிப்பாசிரியர் (பதிப்பு ஒருங்கிணைப்பாளர்)
“தமிழ்ப்புதுக் கவிதைகளின் பன்முகப் பரிமாணங்கள்” – தேசியக் கருத்தரங்கம்,
ஆய்வுக்களஞ்சியம், தொகுதி.1 மனிதநேயம் முதலாக, 393 பக்கங்கள்.
ஆய்வுக்களஞ்சியம், தொகுதி.2, சமூகம், 433
பக்கங்கள்
ஆய்வுக்களஞ்சியம், தொகுதி.3, கவிதையியல், 436 பக்கங்கள் பாரத் கல்லூரி &
தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர், 2007
Subscribe to:
Posts (Atom)