Friday, 6 January 2023
ஒரு நாள் ; ஒரு நூல் - 3 அயோத்திதாரரும் சிங்காரவேலரும் - நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத தகவல்கள் - தொகுப்பும் பதிப்பும் : ஸ்டாலின் ராஜாங்கம்...03.01.2023
ஒரு நாள்; ஒரு நூல் - 3
அயோத்திதாசரும் சிங்காரவேலரும் - நவீன பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத தகவல்கள்
- தொகுப்பும் பதிப்பும் : ஸ்டாலின் ராஜாங்கம்
03.01.2023
ஆகஸ்ட் 2018 இல் புலம் வெளியீடாக வந்த நூல் இது.இந்நூல் 128 பக்கங்கள் கொண்டது. இந்த நூலின் தலைப்பு நீளமானது. நூலின் ஆய்வு ஆழமானது.
அயோத்திதாசரும் சிங்காரவேலரும் இருபெரும் வரலாற்று மைல்கல்கள். அயோத்திதாசர் திராவிடச் சிந்தனைகளின் தோற்றுநர் ; தமிழ் பெளத்த வரைவியலாளர்.சிங்காரவேலர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் ; பெளத்த சங்கத் தோற்றுநர். இருவரும் தத்தம் துறைகளில் முதன்முதலில் பங்களிப்பு செய்தவர்கள். இவர்கள் இருவரையும் விட்டுவிட்டுத் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முடியாது. இத்தகைய வளமான - பலமான -நலமான பின்னணிகளைக் கொண்ட இருவரும் எங்கெங்கெல்லாம் ஒன்றுபட்டார்கள் ; எங்கெங்கெல்லாம் மாறுபாட்டார்கள் என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து சொல்லுகிறது இந்நூல்.
மேலோட்டமான ஆய்வுகள் பல்கிப் பெருகி வரும் தமிழியல் சூழலில் ஆழமான -அழுத்தமான - தெளிவான ஆய்வு நோக்குநிலைகளோடு தன் ஆய்வுகளை முன்வைக்கும் நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆற்றலாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆவார். அவரெழுதியுள்ள புத்தம்புதிய - அரிய தேடல்நிறைக் கண்டுபிடிப்புகளை அகழ்ந்தெடுக்கும் நூல்களுள் இதுவும் ஒன்று.
1845 மே 20 அன்று பிறந்த அயோத்திதிதாசப் பண்டிதர் 1915 மே 5 அன்று காலமானார். அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் எந்த அளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்தின என்பதை அக்காலத்தில் நிகழ்ந்த விவாதங்களிலிருந்து அறிந்துகொள்ளலாம். பெளத்தம், ,திராவிட சிந்தனை முன்வைப்பு , தமிழியம் , தமிழ்த்தேசியம், மக்கள் வழிபாட்டு முறைகள் விளக்கம் என ஒவ்வொரு பொருண்மையையும் தமிழ்ச் சிந்தனை மரபில் முதன்முதலில் முன்வைத்த மாபெரும் பேரறிஞர் அவர்.
பண்டிதர் காலத்தில் மேலே சொன்ன ஒவ்வொரு துறைகளும் சிந்தனையாக்கம், செயலாக்கம் என்ற இருநிலைகளிலும் மறுமலர்ச்சியையும் திசைவடிவமைப்பையும் பெற்றன.அவர் 1915 இல் காலமானார்; அத்தோடு அவர் காணாமலும் அடிக்கப்பட்டார். 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் காலமான பண்டிதர் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்டார். அவ்வாறு அவர் மறு கண்டுபிடிப்பு செய்யப்பட்ட அவரது நினைவு நூற்றாண்டான 21 ஆம் நூற்றாண்டில் அவரது படைப்புகளும் அவற்றின் சிந்தனைகளும் மீண்டும் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ளன. இந்த அடிப்படையில் இரண்டு நூற்றாண்டுகளின் தமிழ்ச் சிந்தனை மரபில் இரண்டுமுறை மறுமலர்ச்சியை உருவாக்கியுள்ள பண்டிதரைப் புதுக் கண்டுபிடிப்பு செய்கிறது இந்நூல்.
( நாளை நிறைவு செய்வேன் )
இன்று 04.01.2023 காலைமுதல் மீதிப் பகுதியை எழுதி முடித்துப் பகிரும் நேரத்தில் தவறுதலால் நீங்கிவிட்டது... என் செய்வேன்...?!
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0EsQo6e4CFWWBPwoLKZ4qKpvXPShBNr5E3rr24obMDsYbHDs2o1jYt4QLwSaBpgSnl&id=100007862881487
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment